பிற விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன் சிந்து, காஷ்யப் 2–வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Korea Open Badminton Sindhu, Kashyap advances to 2nd round

கொரியா ஓபன் பேட்மிண்டன் சிந்து, காஷ்யப் 2–வது சுற்றுக்கு முன்னேற்றம்

கொரியா ஓபன் பேட்மிண்டன் 
சிந்து, காஷ்யப் 2–வது சுற்றுக்கு முன்னேற்றம்
கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.
சியோல், 

பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து (இந்தியா) 21–13, 21–8 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை செங் நான் யியை துவம்சம் செய்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் காஷ்யப் 21–13, 21–16 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் ஹூ ஜென் ஹாவை வெளியேற்றி 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா தன்னை எதிர்த்த தாய்லாந்து வீரர் தனோன்சாக்கை 21–13, 21–23, 21–9 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார். இதே போல் இந்திய வீரர் சாய் பிரனீத் 21–15, 21–10 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் ஹூ யுன்னை விரட்டினார். அதே சமயம் இந்திய வீரர்கள் சவுரப் வர்மா, பிரனாய் ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.