பிற விளையாட்டு

மாநில கைப்பந்து போட்டி: கால்இறுதியில் வருமான வரி அணி + "||" + State Volleyball Competition: The Income Tax Team at the end of the quarter

மாநில கைப்பந்து போட்டி: கால்இறுதியில் வருமான வரி அணி

மாநில கைப்பந்து போட்டி: கால்இறுதியில் வருமான வரி அணி
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் 67–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் 67–வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் வருமான வரி அணி 25–15, 18–25, 25–22 என்ற செட் கணக்கில் எஸ்.டி.சி. (பொள்ளாச்சி) அணியை தோற்கடித்தது. மற்றொரு லீக் ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணி 27–25, 27–25 என்ற நேர்செட்டில் இந்தியன் வங்கியை வீழ்த்தியது. லீக் ஆட்டங்கள் முடிவில் ‘பி’ பிரிவில் வருமான வரி அணி முதலிடமும் (3 வெற்றி), செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி 2–வது இடமும் (2 வெற்றி, ஒரு தோல்வி), இந்தியன் வங்கி 3–வது இடமும் (ஒரு வெற்றி, 2 தோல்வி) பிடித்து கால்இறுதிக்கு முன்னேறின.

பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பனிமலர் அணி 25–14, 25–14 என்ற நேர்செட்டில் பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் (கோவை) அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் பி.கே.ஆர்.(கோபி) அணி 25–14, 25–18 என்ற நேர்செட்டில் ஜி.கே.எம் அணியை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. அணி 25–19, 25–19 என்ற நேர்செட்டில் டாக்டர் சிவந்தி கிளப் அணியை தோற்கடித்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் ஜேப்பியார், பி.கே.ஆர். (கோபி), ஜி.கே.எம்., எஸ்.டி.ஏ.டி., டாக்டர் சிவந்தி கிளப், பனிமலர், பாரதியார் ஆகிய அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இன்று நடைபெறும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள்–தமிழ்நாடு போலீஸ் அணிகள் இடையிலான தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கால்இறுதிக்குள் நுழையும்.