பிற விளையாட்டு

சென்னை மாவட்ட அணிகள் தேர்வு + "||" + Chennai District Selections

சென்னை மாவட்ட அணிகள் தேர்வு

சென்னை மாவட்ட அணிகள் தேர்வு
மாநில சப்-ஜூனியர் கைப்பந்து சென்னை மாவட்ட அணிகள் தேர்வு.
சென்னை,

40-வது மாநில சப்-ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரத்தில் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட சப்-ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.


1-1-2002-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தகுந்த பிறப்பு சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.