பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய ‘ஏ’ அணியின் தொடரின் போது சில இளம் விக்கெட் கீப்பர்களை பயன்படுத்தி பார்த்தோம்.

‘உலக கோப்பை வரை டோனி நீடிப்பார்’

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய ‘ஏ’ அணியின் தொடரின் போது சில இளம் விக்கெட் கீப்பர்களை பயன்படுத்தி பார்த்தோம். ஆனாலும் உலக கோப்பை போட்டி வரை டோனியையே விக்கெட் கீப்பராக தொடரச் செய்வது என்று முடிவு செய்து விட்டோம். டோனி தான் இப்போதும் உலகின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பராக திகழ்கிறார். இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அவர் ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் செய்த விதம் வியக்க வைத்தது. இப்போது அவரை நெருங்குவதற்கு கூட எந்த விக்கெட் கீப்பரும் இல்லை’ என்றார்.

பார்சிலோனாவிடம் வீழ்ந்தது ரியல்மாட்ரிட்

ஸ்பெயினில் நடந்து வரும் லாலிகா கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில பார்சிலோனா அணி, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோவை உள்ளடக்கிய நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட்டை 3–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. லூசிஸ் சுவாரஸ் (54–வது நிமிடம்), லயோனல் மெஸ்சி (64 மற்றும் 90–வது நிமிடம்) ஆகியோர் பார்சிலோனா அணியில் கோல் அடித்தனர். பார்சிலோனா 45 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல்மாட்ரிட் 31 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும் உள்ளன. தோல்வியின் மூலம் இந்த சீசனில் ரியல்மாட்ரிட் கோப்பையை வெல்லும் வாய்ப்பு வெகுவாக மங்கி போய் விட்டது.

கிரிக்கெட் வாரியத்தில் சபா கரிமுக்கு பொறுப்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்தின், கிரிக்கெட் செயல்பாடுகள் பொதுமேலாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரிம் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பொறுப்பில் முன்பு இருந்த எம்.வி.ஸ்ரீதர் இரட்டை ஆதாய பதவி விவகாரத்தினால் விலகினார். இதையடுத்து தற்போது இந்த பொறுப்புக்கு வந்துள்ள சபாகரிம் ஜனவரி 1–ந்தேதியில் இருந்து பணியை தொடங்குவார்.தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
2. துளிகள்
* வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ‌ஷகிப் அல்–ஹசன், இடதுகை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆசிய போட்டி இறுதிப்போட்டியில் ஆடாமல் தாயகம் திரும்பினார்.
3. து ளி க ள்
*இத்தாலி கிளப் அணிகளுக்கான ‘செரி ஏ’ போட்டியில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் யுவன்டெஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் சாஸ்சுலோ அணியை வீழ்த்தியது.
4. துளிகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
5. துளிகள்
உலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.