பிற விளையாட்டு

உலக ரேபிட் செஸ் பட்டம் வென்ற ஆனந்துக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது + "||" + World Rapid Chess wins the title Anand appreciative ceremony

உலக ரேபிட் செஸ் பட்டம் வென்ற ஆனந்துக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது

உலக ரேபிட் செஸ் பட்டம் வென்ற ஆனந்துக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது
அகில இந்திய செஸ் பெடரே‌ஷன் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில், சவூதி அரேபியாவில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில்

சென்னை,

அகில இந்திய செஸ் பெடரே‌ஷன் மற்றும் தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில், சவூதி அரேபியாவில் நடந்த உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பாராட்டு விழா சென்னையில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி அரங்கில் நேற்று நடந்தது. விழாவில் ஆனந்துக்கு அகில இந்திய செஸ் சங்க செயலாளர் பாரத்சிங் சவுகான், முன்னாள் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் செயலாளர் மனுவேல் ஆரோன், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நினைவுப்பரிசு வழங்கினார்கள். அத்துடன் அவருக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. விழாவில் ஆனந்தின் மனைவி அருணா, சர்வதேச செஸ் சம்மேளன துணைத்தலைவர் டி.வி.சுந்தர், அகில இந்திய செஸ் சங்க தலைவர் வெங்கட்ராமராஜா, தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, அமைப்பு குழு சேர்மன் முருகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவுக்கு வந்த ஆனந்துக்கு கல்லூரி மாணவிகள் அனைவரும் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் இந்தியா ‘திரில்’ வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் விராட்கோலி பாராட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.
2. பெருங்களூரில் அரசை எதிர்பார்க்காமல் மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த இளைஞர்கள் கிராம மக்கள் பாராட்டு
பெருங்களூர் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை அந்த பகுதி இளைஞர்கள் சுத்தம் செய்தனர். இதனால் கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் அந்த இளைஞர்களை பாராட்டினர்.
3. பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு
ஏழைகள் பயன் அடையும் வகையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் என்ற பெயரில் காப்பீடு திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்தி 100 நாட்கள் நிறைவடைந்து உள்ளது.
4. ‘கஜா’ புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டு விழா
‘கஜா’ புயல் நிவாரணபணிகளில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
5. கஜா புயல் நடவடிக்கை: எதிர்க்கட்சிகளின் பாராட்டு அரசுக்கு உற்சாகம் தருகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
கஜா புயல் நடவடிக்கையில் அரசின் செயல்பாட்டு எதிர்க்கட்சிகள் பாராட்டு தெரிவித்து இருப்பது அரசுக்கு உற்சாகத்தை தருகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.