பிற விளையாட்டு

பிரிமியர் பேட்மிண்டன் லீக்: சாய்னா அணி தோல்வி + "||" + Premier Badminton League: Saina's team failed

பிரிமியர் பேட்மிண்டன் லீக்: சாய்னா அணி தோல்வி

பிரிமியர் பேட்மிண்டன் லீக்: சாய்னா அணி தோல்வி
8 அணிகள் இடையிலான 3–வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தின் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

சென்னை,

8 அணிகள் இடையிலான 3–வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தின் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 16–வது லீக் ஆட்டத்தில் சாய்னா நேவால் தலைமையிலான லக்னோ அவாதே வாரியர்ஸ் அணி, ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் தலைமையிலான ஐதராபாத் ஹன்டர்சும் மல்லுகட்டியது.

இதில் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டங்களில் ஒன்றான பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஐதராபாத் வீராங்கனை கரோலினா மரின் 15–5, 15–7 என்ற நேர் செட்டில் சாய்னா நேவாலை துவம்சம் செய்து மிரள வைத்தார். ஆண்கள் ஒற்றையரில் ஐதராபாத் வீரர் சாய் பிரனீத் 15–10, 15–10 என்ற நேர் செட்டில் லக்னோ அணியின் முன்னணி வீரர் ஸ்ரீகாந்துக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு ஒற்றையரில் ஐதராபாத்தின் லீ ஹியன் 13–15, 15–9, 15–14 என்ற செட் கணக்கில் காஷ்யப்பை தோற்கடித்தார். கலப்பு இரட்டையர், ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் ஐதராபாத் அணிக்கே வெற்றி கிட்டியது. துருப்பு ஆட்டத்திலும் (டிரம்ப் மேட்ச்) லக்னோ அணி தோல்வியை தழுவியதால், தங்களது ஒட்டுமொத்த புள்ளிகளில் இருந்து ஒரு புள்ளியை இழக்க வேண்டியதாகி விட்டது. முடிவில் ஐதராபாத் அணி 6–(–1) என்ற புள்ளி கணக்கில் லக்னோவை சாய்த்தது. ஐதராபாத் அணி 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன் அரைஇறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டது. லக்னோ அணி 12 புள்ளிகளுடன் 3–வது இடத்தில் இருக்கிறது. இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்மா‌ஷர்ஸ அணி, பெங்களூரு பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது.