பிற விளையாட்டு

பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் வேண்டுகோள் + "||" + Wrestler's request to PM Modi

பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் வேண்டுகோள்

பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் வேண்டுகோள்
காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரவீன் ராணா பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
புதுடெல்லி,

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் பிரவீன் ராணா பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் எனது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். சுஷில்குமார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு தகுதி தேர்வின் போது சுஷில்குமார் ஆதரவாளர்கள் பிரவீன் ராணா மற்றும் அவரது தம்பி நவீன் ராணா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.