பிற விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் 27 வீரர்–வீராங்கனைகள் + "||" + Commonwealth Games Indian rifle shooters Team 27 players

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் 27 வீரர்–வீராங்கனைகள்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய துப்பாக்கி சுடுதல் அணியில் 27 வீரர்–வீராங்கனைகள்
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் ஏப்ரல் 4–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் ஏப்ரல் 4–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியை இந்திய ரைபிள் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. அணியில் 15 வீரர்களும், 12 வீராங்கனைகளும் இடம் பிடித்துள்ளனர். இந்திய துப்பாக்கி சுடுதல் அணி வருமாறு:–

ஆண்கள்: சஞ்சீவ் ராஜ்புத், செயின் சிங், ககன்நரங், ரவிகுமார், தீபக்குமார், அனிஷ், நீரஜ்குமார், ஜிதுராய், ஓம்பிரகாஷ் மிஹர்வால், மனவ்ஜித் சந்து, கைனன் செனாய், முகமது அசாப், அங்குர் மிட்டல், சுமித்சிங், ஷீரஜ் ஷேக்.

பெண்கள்: அஞ்சும் மொட்ஜில், தேஜஸ்வினி சவாந்த், அபுர்வி சண்டிலா, மெகுலி கோஷ், ஹீனா சித்து, அன்னுராஜ் சிங், மனு பாகெர், ஸெரேயாசி சிங், சீமா தோமர், வர்ஷா வர்மன், சானியா ஷேக், மகேஸ்வரி சவுகான்.

இதற்கிடையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக (ஷெப்–டி–மிஷின்) ஐ.ஓ.ஏ. இணை செயலாளர் விக்ரம்சிங் சிசோடியாவை இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.) நியமனம் செய்துள்ளது.