துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 2 Feb 2018 8:30 PM GMT (Updated: 2 Feb 2018 8:05 PM GMT)

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகுவதாக முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே கூறியுள்ளார்.

*தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரஹானேவுக்கு பதிலாக ரோகித் சர்மாவை சேர்த்தது சரியான முடிவு தான் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். டெஸ்ட் தொடர் தொடங்கும் போது ரோகித் சர்மா தான் சூப்பர் பார்மில் இருந்தார். அதே நேரத்தில் ரஹானே களத்தில் மட்டுமல்ல, வலை பயிற்சியில் கூட தடுமாறினார் என்றும் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

*மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகுவதாக முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே கூறியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் திறன் கண்டுபிடிப்புக்கான தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதால் இரட்டை ஆதாய சர்ச்சையை கருத்தில் கொண்டு, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பதவியை துறக்கிறார்.

*ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. இதில் நேற்று நடந்த 2–வது அரைஇறுதியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகட்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் 179 ரன்கள் இலக்கை நோக்கிஆடிய மெல்போர்ன் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் அடிலெஸ்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி, ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Next Story