பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
மும்பையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அளித்த பேட்டியில்
* மும்பையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அளித்த பேட்டியில், ‘டென்னிசில் வியக்கத்தக்க சாதனைகளை அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் படைத்துள்ளார். விளையாட்டிலும் சரி, தாய்மை உணர்வை வெளிப்படுத்துவதிலும் சரி எல்லாவற்றுக்கும் அவர் ஒரு முன்மாதிரி பெண்மணியாக விளங்குகிறார்’ என்று புகழ்ந்துள்ளார்.


* அடிலெய்டில் இன்று நடக்கும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்-ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன. இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் சோனி சிக்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான கபடி போட்டி சென்னை கலங்கரை விளக்கம் அருகில் உள்ள சிங்காரவேலர் திடலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் 10 அணிகளும், பெண்கள் பிரிவில் 10 அணிகளும் கலந்து கொள்கின்றன. ‘நாக்-அவுட்’ முறையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

* ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் சந்தித்தன. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 117 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகளும், ஸ்டான்லேக் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் மழை குறுக்கிட்டதால் 15 ஓவர்களில் 95 ரன்கள் எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி 11.3 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் நடந்த 63-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 2-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை தோற்கடித்து 9-வது வெற்றியை பதிவு செய்தது. இன்றைய ஆட்டத்தில் கோவா-கவுகாத்தி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை.
2. துளிகள்
* வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ‌ஷகிப் அல்–ஹசன், இடதுகை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆசிய போட்டி இறுதிப்போட்டியில் ஆடாமல் தாயகம் திரும்பினார்.
3. து ளி க ள்
*இத்தாலி கிளப் அணிகளுக்கான ‘செரி ஏ’ போட்டியில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் யுவன்டெஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் சாஸ்சுலோ அணியை வீழ்த்தியது.
4. துளிகள்
பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.
5. துளிகள்
உலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.