ஆசிய பேட்மிண்டன் போட்டி கால்இறுதியில் இந்திய அணிகள் தோல்வி


ஆசிய பேட்மிண்டன் போட்டி கால்இறுதியில் இந்திய அணிகள் தோல்வி
x
தினத்தந்தி 9 Feb 2018 8:30 PM GMT (Updated: 9 Feb 2018 8:01 PM GMT)

ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.

அலோர்செடார்,

ஆசிய பேட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இந்தோனேஷியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 1–3 என்ற கணக்கில் தோல்வி கண்டு அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–13, 24–22 என்ற நேர்செட்டில் பிட்ரியானியை (இந்தோனேஷியா) தோற்கடித்தார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்ரீகிருஷ்ணா தோல்வி கண்டார். இரட்டையர் ஆட்டங்களில் இந்தியாவின் அஸ்வினி–சிக்கி ரெட்டி, பி.வி.சிந்து–சன்யோஜிதா ஜோடிகள் தோல்வியை தழுவியது.

ஆண்கள் கால்இறுதி ஆட்டத்திலும் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய அணி 1–3 என்ற கணக்கில் சீனாவிடம் வீழ்ந்தது. ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 14–21, 21–16, 21–7 என்ற செட் கணக்கில் ஷி யுஜியை (சீனா) சாய்த்தார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் தோல்வி கண்டார். இரட்டையர் ஆட்டங்களில் இந்தியாவின் ரங்கி ரெட்டி–சிராக் ஷெட்டி–மனு அட்ரி–சுமீத் ரெட்டி ஜோடி தோல்வியை சந்தித்தது.


Next Story