பிற விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக்: இங்கிலாந்து வீராங்கனை தங்கம் வென்றார் + "||" + Winter Olympics: England player Gold won

குளிர்கால ஒலிம்பிக்: இங்கிலாந்து வீராங்கனை தங்கம் வென்றார்

குளிர்கால ஒலிம்பிக்: இங்கிலாந்து வீராங்கனை தங்கம் வென்றார்
23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது.

பியாங்சாங்,

23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஸ்கெல்டன் போட்டியில் (சக்கரம் பொருத்திய பலகையில் படுத்த நிலையில் குறுகிய வளைவுகள் கொண்ட சரிவான பாதையில் பயணிப்பது) இங்கிலாந்து வீராங்கனை லிஸ்சி யார்னால்டு 51.46 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். ஜெர்மனி வீராங்கனை ஜெக்குலின் 51.82 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், இங்கிலாந்து வீராங்கனை லாரா டியாஸ் 51.83 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். ஆண்களுக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் 1,000 மீட்டர் பந்தயத்தில் கனடா வீரர் சாமுவேல் ஜிரார்டு 1 நிமிடம் 24.650 வினாடியில் கடந்து தங்கப்பதக்கமும், அமெரிக்க வீரர் ஜான் ஹென்ரி 1 நிமிடம் 24.864 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், தென்கொரியாவின் சியோ யிரா 1 நிமிடம் 31.619 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

ஐஸ் ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் தொடக்க சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து அணி 8–0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. சுவிட்சர்லாந்து வீரர் பியுஸ் சுதெர் ‘ஹாட்ரிக்’ கோல்கள் அடித்து அசத்தினார்.