பிற விளையாட்டு

60 மீட்டர் ஓட்டம்: அமெரிக்க வீரர் உலக சாதனை + "||" + 60 meters running American player world record

60 மீட்டர் ஓட்டம்: அமெரிக்க வீரர் உலக சாதனை

60 மீட்டர் ஓட்டம்: அமெரிக்க வீரர் உலக சாதனை
அமெரிக்காவின் தேசிய உள்விளையாட்டு அரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி நியூமெக்சிகோவில் நடந்தது. 60 மீட்டர் ஓட்டம்: அமெரிக்க வீரர் உலக சாதனை படைத்தார்.
நியூமெக்சிகோ,

அமெரிக்காவின் தேசிய உள்விளையாட்டு அரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி நியூமெக்சிகோவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 60 மீட்டர் தூர ஒட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோலிமன் 6.34 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்தார். அமெரிக்க வீரர் மவுரிஸ் கிரீனி இந்த பந்தய தூரத்தை 6.39 வினாடியில் கடந்ததே கடந்த 20 ஆண்டுகளாக உலக சாதனையாக இருந்து வந்தது. சாதனை படைத்த 21 வயதான கிறிஸ்டியன் கோலிமன் கடந்த ஆண்டு லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.