பிற விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக்: மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார் + "||" + Winter Olympics: Also a player dumped in dilemma

குளிர்கால ஒலிம்பிக்: மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார்

குளிர்கால ஒலிம்பிக்: மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார்
23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார்.
பியாங்சாங்,

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட இந்த ஒலிம்பிக் திருவிழாவில் ஒரு பக்கம் வியப்புக்குரிய வகையில் வீரர், வீராங்கனைகள் தங்களது சாகசங்களை காண்பித்து மெய்சிலிர்க்க வைக்கிறார்கள்.


இன்னொரு பக்கம் ஊக்கமருந்து சர்ச்சைகளும் தலைவிரித்தாடுகின்றன. ஜப்பான் ஸ்பீடு ஸ்கேட்டிங் வீரர் 21 வயதான கெய் சாய்ட்டோ ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானதால் உடனடியாக தாயகம் அனுப்பப்பட்டார். அடுத்ததாக தனது மனைவியுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ரஷியாவின் கர்லிங் பந்தய வீரர் அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கி, ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை உபயோகப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். சுலோவேனியா அணியின் ஐஸ் ஆக்கி வீரர் ஜிகா ஜெக்லிக் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகி இருப்பதால் உடனடியாக போட்டியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தென்கொரியாவில் 8 பெண்கள் கற்பழிப்பு - பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை
தென்கொரியாவில், 8 பெண்களை கற்பழித்த பாதிரியாருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டணை விதிக்கப்பட்டது.
2. தேர்வுக்காக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம், தாழ்வாக பறக்கவும் தடை!
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
3. உலகைச் சுற்றி
தென்கொரியாவில் நிதி மந்திரியை அதிரடியாக பதவி நீக்கம் செய்து அதிபர் மூன் ஜே இன் உத்தரவிட்டார்.
4. ஊழல் வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டு சிறை
தென்கொரியாவில் 2008–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் லீ மியுங்–பாக் (வயது 76).
5. தென்கொரியாவும், வட கொரியாவும் இணைந்து அமைத்த புதிய அலுவலகம் திறப்பு
வட கொரியாவில் தென்கொரியாவும், வட கொரியாவும் இணைந்து அமைத்த புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.