பிற விளையாட்டு

தேசிய சீனியர் கைப்பந்து தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி + "||" + Tamilnadu team win in national championship volleyball

தேசிய சீனியர் கைப்பந்து தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி

தேசிய சீனியர் கைப்பந்து தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 28 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.
கோழிக்கோடு,

கேரள மாநில கைப்பந்து சங்கம் சார்பில் 66-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று தொடங்கியது. 28-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 28 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. பெண்களுக்கான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தொடக்க லீக் ஆட்டத்தில் ஆந்திராவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-20, 25-19, 25-21 என்ற நேர்செட்டில் ஆந்திராவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. தமிழக அணியில் உத்கர்ஷா, ஆர்யா ஆகியோரின் ஆட்டம் அபாரமாக இருந்தது.