பிற விளையாட்டு

தேசிய சீனியர் கைப்பந்து அரைஇறுதிக்கு தமிழக அணி தகுதி + "||" + Tamilnadu team qualified for the semi-finals of the national seniors

தேசிய சீனியர் கைப்பந்து அரைஇறுதிக்கு தமிழக அணி தகுதி

தேசிய சீனியர் கைப்பந்து அரைஇறுதிக்கு தமிழக அணி தகுதி
கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஆந்திராவை எதிர்கொண்டது.
கோழிக்கோடு,

66-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, ஆந்திராவை எதிர்கொண்டது. 5 செட் வரை நீடித்த இந்த மோதலில் தமிழக அணி 29-27, 22-25, 25-20, 23-25, 19-17 என்ற செட் கணக்கில் ஆந்திராவை வெளியேற்றி அரைஇறுதிக்கு முன்னேறியது. பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதியில் தமிழக அணி 25-21, 25-13, 25-19 என்ற நேர் செட்டில் தெலுங்கானாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.