பிற விளையாட்டு

தேசிய சீனியர் கைப்பந்து கேரள அணியிடம் தமிழகம் தோல்வி + "||" + National Senior Volleyball Tamil Nadu failed with Kerala team

தேசிய சீனியர் கைப்பந்து கேரள அணியிடம் தமிழகம் தோல்வி

தேசிய சீனியர் கைப்பந்து கேரள அணியிடம் தமிழகம் தோல்வி
கேரள கைப்பந்து சங்கம் சார்பில் 66–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 2–வது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25–22, 30–28, 25–22 என்ற நேர்செட்டில் தமிழக அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெண்கள் பிரிவில் நடந்த 2–வது அரைஇறுதிப்போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி 25–8, 25–14, 25–18 என்ற நேர்செட்டில் மராட்டியத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று

கோழிக்கோடு,

கேரள கைப்பந்து சங்கம் சார்பில் 66–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த 2–வது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25–22, 30–28, 25–22 என்ற நேர்செட்டில் தமிழக அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெண்கள் பிரிவில் நடந்த 2–வது அரைஇறுதிப்போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி 25–8, 25–14, 25–18 என்ற நேர்செட்டில் மராட்டியத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கேரளா–ரெயில்வே அணியும், பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கேரளா–ரெயில்வே அணிகள் மோதுகின்றன. முன்னதாக ஆண்கள் பிரிவில் நடைபெறும் 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு–சர்வீசஸ் அணியும், பெண்கள் பிரிவில் நடைபெறும் 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு–மராட்டியம் அணிகள் சந்திக்கின்றன.


ஆசிரியரின் தேர்வுகள்...