பிற விளையாட்டு

தேசிய சீனியர் கைப்பந்து கேரளா, ரெயில்வே அணிகள் ‘சாம்பியன்’ + "||" + National Senior Volleyball Kerala, Railway teams 'champion'

தேசிய சீனியர் கைப்பந்து கேரளா, ரெயில்வே அணிகள் ‘சாம்பியன்’

தேசிய சீனியர் கைப்பந்து கேரளா, ரெயில்வே அணிகள் ‘சாம்பியன்’
66–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்தது.

கோழிக்கோடு,

66–வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 24–26, 25–23, 25–19, 25–21 என்ற செட் கணக்கில் இந்தியன் ரெயில்வே அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் சர்வீசஸ் அணி 26–24, 25–23, 20–25, 25–23 என்ற செட் கணக்கில் தமிழக அணியை சாய்த்து 3–வது இடத்தை பிடித்தது.

பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியன் ரெயில்வே அணி, கேரளாவை சந்தித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரெயில்வே அணி 25–21, 26–28, 21–15, 25–18, 15–12 என்ற செட் கணக்கில் கேரளாவை போராடி வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் மராட்டிய அணி 18–25, 25–18, 20–25, 25–23, 15–10 என்ற செட் கணக்கில் தமிழக அணியை வீழ்த்தி 3–வது இடத்தை சொந்தமாக்கியது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராமவ்தார்சிங் ஜாக்கர், துணைத் தலைவர்கள் எஸ்.வாசுதேவன், ரதின்ராய் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பதக்கம் வழங்கினார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்க எதிர்ப்பு: நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் ரெயில் மறியல்
கன்னியாகுமரி எக்ஸ்பிரசை கொச்சுவேளிக்கு இயக்க எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கிழக்கு கடற்கரை சாலையையொட்டி காரைக்குடி –கன்னியாகுமரி அகலரெயில்பாதை திட்டம் ரத்து; ரெயில்வே வாரியம் முடிவு
காரைக்குடி–கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை சாலையை யொட்டி அகலரெயில்பாதை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய ரெயில்வே வாரியம் முடிவு செய்து உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
3. மறுகட்டமைப்பு பணிகள் தீவிரம்: மதுரை ரெயில் நிலையத்தில் நுழைந்தால் இனி கட்டணம்தான்
மதுரை ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதி விமான நிலையங்களை போல மறுகட்டமைப்பு செய்யும் பணி தொடங்கி உள்ள நிலையில், இந்த பணிகள் முடிந்ததும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
4. தாம்பரம்– கொல்லம் இடையே தினசரி ரெயில் இயக்க வேண்டும்; தென்னக ரெயில்வேயிடம் வலியுறுத்தல்
தாம்பரம்–கொல்லம் இடையே தற்போது வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிரந்தரமாக தினசரி ரெயிலாக இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
5. வருகிற 20, 27-ந்தேதிகளில் கரூர் மார்க்க ரெயில் சேவையில் மாற்றம்
கரூர் மார்க்க ரெயில் சேவையில் வருகிற 20, 27-ந் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.