பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று வருகிற 4–ந்தேதி முதல் 25–ந்தேதிவரை ஜிம்பாப்வேயில் நடக்கிறது.

பயிற்சி ஆட்டத்தில் 115 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்

லக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று வருகிற 4–ந்தேதி முதல் 25–ந்தேதிவரை ஜிம்பாப்வேயில் நடக்கிறது. இதில் முன்னாள் உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே உள்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் இருந்து டாப்–2 இடத்தை பிடிக்கும் அணிகள் 2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெறும். இதையொட்டி ஹராரே நகரில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்–ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 33.4 ஓவர்களில் வெறும் 115 ரன்களில் முடங்கியது. கிறிஸ் கெய்ல் (16 ரன்), எவின் லீவிஸ் (10 ரன்), சாமுவேல்ஸ் (15 ரன்) ஆகிய நட்சத்திர வீரர்கள் சோபிக்கவில்லை. ஆனால் இந்த சுலப இலக்கை கூட எட்ட முடியாமல் ஐக்கிய அரபு அமீரக அணி 29 ஓவர்களில் 83 ரன்னில் சுருண்டு, 32 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சுழற்பந்து வீச்சாளர் நிகிதா மில்லர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் மானத்தை காப்பாற்றினார்.

வங்காளதேச லீக் அணிக்கு பயிற்சியாளராக வெட்டோரி நியமனம்

ங்காளதேச பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ராஜ்‌ஷஹி கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். 2018 மற்றும் 2019–ம் ஆண்டு சீசனுக்கு அவர் ஒப்பந்தமாகியுள்ளார். வங்காளதேச அணி ஒன்றுக்கு வெட்டோரி பயிற்சியாளராக பணியாற்ற இருப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே அவர் ஐ.பி.எல். உள்ளிட்ட மூன்று உள்நாட்டு 20 ஓவர் லீக் அணிகளுக்கு பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாண்ட்யாவுக்கு, கபில்தேவ் அறிவுரை

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில், ‘ஹர்திக் பாண்ட்யாவிடம் திறமை இருக்கிறது. வேறு வீரருடன் ஒப்பிடும் போது அவருக்கு அதிக நெருக்கடி உருவாகும். களம் இறங்கினால், உற்சாகமாக விளையாட வேண்டும். இந்த வகையில் தான் அவரை பார்க்க நான் விரும்புகிறேன். பாண்ட்யா ஒரு பேட்ஸ்மேன் ஆல்–ரவுண்டர். அதனால் அவர் பேட்டிங் திறனை மேம்படுத்துவதில் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும். பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டால், அதன் பிறகு பந்து வீசுவது எளிதாகி விடும். அது தான் ஆல்–ரவுண்டருக்கு உரித்தான பாணியாகும்’ என்றார். மேலும் கபில்தேவ், ‘அணியில் சிலர் நிதானமாக இருக்க வேண்டும். அப்போது தான் களத்தில், ஆட்டத்தின் போக்கை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதே சமயம் சிலர் மிக ஆக்ரோ‌ஷமாக செயல்பட வேண்டும். ஆக்ரோ‌ஷமும், பொறுமையும் சரியான கலவையில் இருப்பது வெற்றிக்கு உதவிகரமாக இருக்கும்’ என்றார்.

கொல்கத்தா அணியின் கேப்டன் யார்?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கேப்டனுக்கான போட்டியில் ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், கிறிஸ் லின், வினய்குமார் ஆகியோர் உள்ளனர். இவர்களில் தினேஷ் கார்த்திக் அல்லது உத்தப்பா ஆகியோரில் ஒருவருக்கே கேப்டன் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் அறிவிப்பு தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


அதிகம் வாசிக்கப்பட்டவை