பிற விளையாட்டு

உலக போட்டியில் வெண்கலம் வென்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைக்கு ரூ.2 கோடி பரிசு + "||" + Bronze won the World Tournament For gymnastics Rs 2 crore gift

உலக போட்டியில் வெண்கலம் வென்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைக்கு ரூ.2 கோடி பரிசு

உலக போட்டியில் வெண்கலம் வென்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைக்கு ரூ.2 கோடி பரிசு
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஐதராபாத்தை சேர்ந்த அருணா புத்தாரெட்டி வெண்கலப்பதக்கம் வென்று பிரமாதப்படுத்தினார்.

ஐதராபாத்,

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஐதராபாத்தை சேர்ந்த அருணா புத்தாரெட்டி வெண்கலப்பதக்கம் வென்று பிரமாதப்படுத்தினார். இதன்மூலம் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

22 வயதான அருணா ரெட்டி, தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு ரூ.2 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சந்திரசேகரராவ் அறிவித்தார். அவரது பயிற்சியாளர் பிரிஜ் கிஷோருக்கு நிதி உதவி வழங்கப்படும் என்றும் கூறினார்.