பிற விளையாட்டு

சர்வதேச ரேபிட் செஸ் இந்திய வீரர் ஆனந்த் சாம்பியன் + "||" + International Rapid Chess Indian Player Anand Champion

சர்வதேச ரேபிட் செஸ் இந்திய வீரர் ஆனந்த் சாம்பியன்

சர்வதேச ரேபிட் செஸ் இந்திய வீரர் ஆனந்த் சாம்பியன்
மாஸ்கோவில் நடந்த சர்வதேச ரேபிட் செஸ் இந்திய வீரர் ஆனந்த் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மாஸ்கோ,

தல் மெமோரியல் சர்வதேச ரேபிட் செஸ் போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. இதன் 9-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேல் வீரர் போரிஸ் ஜெல்பான்ட்டை சந்தித்தார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. 9 சுற்றுகள் முடிவில் ஆனந்த் 4 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 3-வது சுற்றில் ஆனந்த், அஜர்பைஜான் வீரர் ஷகாரியாரிடம் மட்டும் தோல்வி கண்டார். ஷகாரியார் (ரஷியா), கர்ஜாகின் (ரஷியா), நகமுரா (அமெரிக்கா) ஆகியோர் 5 புள்ளிகளுடன் முறையே 2 முதல் 4 இடங்களை பிடித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை