பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் : அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தார் பிவி சிந்து + "||" + Sindhu loses epic semifinal at All England Championship

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் : அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தார் பிவி சிந்து

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் : அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தார் பிவி சிந்து
பர்மிங்காமில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஜப்பானின் அகனே யமகுச்சியிடம் போராடி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். #AllEnglandOpen2018 #PVSindhu
பர்மிங்காம்,

உலக புகழ் பெற்ற ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில், ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை பிவி சிந்துவும், பேட்மிண்டன் விளையாட்டின் உலகத்தர வரிசைப் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கும் ஜப்பானைச் சேர்ந்த அகனே யமகுச்சியும் போட்டியிட்டனர்.

இப்போட்டியின் முதல் செட்டை சிந்து 21-19 என்னும் புள்ளிகளில் கைப்பற்றினார். அடுத்த செட்டை யமகுச்சி 21-19 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் இருவரும் அதிரடியாக விளையாடி மாறி மாறி புள்ளிகளைப் பெற்றனர். இருப்பினும் இறுதியில் யமகுச்சி 21-18 என மூன்றாவது செட்டை கைப்பற்றினார். இதன்மூலம் 19-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற யமகுச்சி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். போராடி தோல்வியுற்ற பிவி சிந்து தொடரிலிருந்து வெளியேறினார். 

இந்நிலையில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் யமகுச்சி -  சீனாவைச் சேர்ந்த தாய் சூ யிங் ஆகியோர் பலப்பரீட்சை செய்ய உள்ளனர்.