காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழாவில் தேசிய கொடி ஏந்துகிறார், பி.வி.சிந்து


காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழாவில் தேசிய கொடி ஏந்துகிறார், பி.வி.சிந்து
x
தினத்தந்தி 24 March 2018 11:15 PM GMT (Updated: 24 March 2018 8:44 PM GMT)

காமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழாவில் தேசிய கொடியை பி.வி.சிந்து ஏந்திச் செல்கிறார்.

புதுடெல்லி,

71 நாடுகள் பங்கேற்கும் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடக்கிறது. இதில் இந்திய தரப்பில் 222 வீரர், வீராங்கனைகள் 15 வகையான போட்டிகளில் களம் இறங்குகிறார்கள். தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியுள்ளது. ரியோ ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய சாதனையாளரான பி.வி.சிந்து 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். காமன்வெல்த் விளையாட்டில் சீனா, ஜப்பான் கலந்து கொள்ளாத நிலையில் பேட்மிண்டனில் மகுடம் சூடுவதற்கு சிந்துவுக்கே பிரகாசமான வாய்ப்புள்ளது.

Next Story