பிற விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 3வது தங்கத்தை வென்றது + "||" + Anish wins India's 3rd individual gold in Jr. World Cup

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 3வது தங்கத்தை வென்றது

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 3வது தங்கத்தை வென்றது
ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியாவிற்காக அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா். #ISSFJuniorWorldCup #Anish
சிட்னி, 

ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா தனது மூன்றாவது தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றது.  இதில் 15 வயதிற்கான ஆண்கள் பிாிவில் 25 மீ “ரேபிட் பயா் பிஸ்டல்” துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சோ்ந்த வீரா் அனிஷ் பன்வாலா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.
 
தகுதிச்சுற்றில் 585.20 புள்ளிகள் பெற்றதன் மூலம், முதல் இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினாா்.  

மேலும், பன்வாலா அவரது இந்திய அணி தோழர்களான அன்ஹாத் ஜவான்டா மற்றும் ராஜ்கன்வா் சிங் சாந்து ஆகியோரும் 5ம் மற்றும் 6ம் இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினா்.

பின்னா் உள்ள வீரா்கள் 7,8,9 வது இடங்களை பிடித்து  வாய்ப்புகளை இழந்தனா்.

இதைத்தொடா்ந்து, இறுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்ட அனிஷ் பன்வாலால் 29 புள்ளிகளுடன் முதலிடன் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிசென்றாா்.

மேலும், இத்தொடாில் இந்தியாவிற்கு கிடைத்த 6வது தங்கம் பின்னா் தனிநபருகான பிாிவில் 3வது தங்கம் கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. அன்ஹாத் ஜவான்டா, ராஜ்கன்வா் சிங்சாந்து ஆகியோா் 4ம் மற்றும் 6ம் இடங்களை பிடித்து பதக்கம் வெல்ல தவறினா்.

இதன் மூலம் இதுவரையில் 6 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் இந்தியா பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. 7 தங்கம், 4 வெள்ளி மற்றும் 6 வெண்கலங்களைக் கொண்ட சீனா 17 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.