ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது


ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது
x
தினத்தந்தி 27 March 2018 9:00 PM GMT (Updated: 27 March 2018 8:31 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடந்து வருகிறது.

சிட்னி,

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு போட்டியில் இந்தியாவின் மனு பாகெர்–அன்மோல் ஜோடி இறுதிப்போட்டியில் 478.9 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை வென்றது. சீனாவை சேர்ந்த இரண்டு அணிகள் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது.

பெண்களுக்கான ‘ஸ்கீட்’ போட்டியில் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜெனிமாத் செக்ஹோன் இறுதிப்போட்டியில் 36 புள்ளிகள் சேர்த்து வெண்கலப்பதக்கத்தை பெற்றார். ஆஸ்திரேலிய வீராங்கனை அய்ஸ்லின் ஜோன்ஸ் (51 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், சீன வீராங்கனை யுபெய் செ (47 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர். பதக்கப்பட்டியலில் சீனா 8 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா 7 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்துடன் 2–வது இடத்தில் உள்ளது.


Next Story