பிற விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனை முஸ்கன் தங்கம் வென்றார் + "||" + Junior World Cup shooter Indian heroine Musson won gold

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனை முஸ்கன் தங்கம் வென்றார்

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனை முஸ்கன் தங்கம் வென்றார்
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடந்து வருகிறது.

சிட்னி,

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனை முஸ்கன் 35 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சீன வீராங்கனை சிஹாங் 34 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், தாய்லாந்து வீராங்கனை கன்யாகோன் ஹிருன்போம் 26 புள்ளியுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதன் அணிகள் பிரிவில் முஸ்கன், மனுபாகெர், தேவன்ஷி ராணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அருனிமா கவுர், மஹிமா துர்ஹி அகர்வால், தனு ராவல் ஆகியோர் அடங்கிய மற்றொரு இந்திய அணி வெள்ளிப்பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப்பதக்கமும் பெற்றன. பதக்கப்பட்டியலில் சீனா 9 தங்கம், 8 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா 9 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலப்பதக்கத்துடன் 2–வது இடத்தில் உள்ளது.அதிகம் வாசிக்கப்பட்டவை