பிற விளையாட்டு

அகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழக யூத் அணிக்கு 3–வது வெற்றி + "||" + All India Volleyball Tournament: Tamil Nadu Youth team 3rd win

அகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழக யூத் அணிக்கு 3–வது வெற்றி

அகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழக யூத் அணிக்கு 3–வது வெற்றி
நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45–வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3–வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். அணி 22–25, 25–19, 25–15, 25–19 என்ற செட் கணக்கில் பனிமலர் அணியை வீழ்த்தியது. பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தென் மத்திய ரெயில்வே அணி 25–21, 25–18, 25–22 என்ற நேர்செட்டில் கேரளா போலீஸ் அணியை சாய்த்து முதல் வெற்றியை தனதாக்கியது. மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு யூத் அணி 25–15, 8–25, 25–16, 25–23 என்ற செட் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வீழ்த்தி 3–வது வெற்றியை பதிவு செய்தது.