பிற விளையாட்டு

வி.ஐ.டி. சென்னையின் விளையாட்டு விழா + "||" + V.I.T. in Chennai sports Festival

வி.ஐ.டி. சென்னையின் விளையாட்டு விழா

வி.ஐ.டி. சென்னையின் விளையாட்டு விழா
பல்கலைக்கழக தினம் மற்றும் விளையாட்டு விழா சென்னையில் நடந்தது.
சென்னை,

வி.ஐ.டி. சென்னையின் பல்கலைக்கழக தினம் மற்றும் விளையாட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணைத்தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை துணைவேந்தர் என்.சம்பந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். வி.ஐ.டி. சென்னையின் சிறந்த மாணவருக்கான ஜி.வி.தங்கப்பதக்கம் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசு மாணவி சுவர்ண சவுமியாவுக்கு வழங்கப்பட்டது. விழாவில் வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் வி.கே.சரஸ்வத், நாஸ்காம் அமைப்பின் முன்னாள் சேர்மன் கணேஷ் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, வி.ஐ.டி. சென்னை மாணவ-மாணவியர், ஊழியர் என 1,300 பேருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான ரொக்க விருதுகளை வழங்கி பாராட்டினார்கள்.


இந்த நிகழ்ச்சியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் வி.கே.சரஸ்வத் பேசுகையில், ‘உலக தரத்திலான கல்வி வழங்குவதிலும், ஆராய்ச்சி பணிகளிலும் வி.ஐ.டி. சாதனை படைத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். உங்களது கல்லூரி வாழ்க்கையில் கல்வியுடன், கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக தொழில்நுட்ப ஆராய்ச்சி வாழ்க்கையின் மதிப்பை கூட்டக்கூடியது. அது மாற்றத்துக்கான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புகளாக இருக்க வேண்டும். அதிலும் உங்களது வடிவமைப்பு எண்ணங்கள், பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்று சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை ஆம்னி பஸ்சில் ரூ.62¼ லட்சம் பறிமுதல் ஒருவர் கைது
சென்னை ஆம்னி பஸ்சில் ரூ.62¼ லட்சத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
2. சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலி - மத்திய அரசு தகவல்
சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
3. சென்னையில் இருந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
சென்னையில் இருந்து சென்ற காரும், லாரியும் ஆந்திராவில் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.
4. சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நேற்று இரவு முதல் மழை பெய்துவரும் நிலையில் சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
5. இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.