பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் இந்திய அணிகள் வெற்றி + "||" + Table Tennis, Badminton India teams win

டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் இந்திய அணிகள் வெற்றி

டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் இந்திய அணிகள் வெற்றி
டேபிள் டென்னிஸ் மற்றும் பேட்மிண்டனில் இந்திய அணிகள் வெற்றிபெற்றது.
கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் டிரினிடாட் மற்றும் டொபாக்கோவையும், 2-வது ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்து அணியையும் 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.


இதில் இந்திய பெண்கள் அணி முதல் லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 3-1 என்ற கணக்கில் வேல்ஸ் அணியையும் வென்றது.

பேட்மிண்டன் போட்டியில் அணிகள் பிரிவில் இந்திய அணி அடுத்தடுத்து 2 வெற்றிகளை தனதாக்கியது. ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் இலங்கையையும், 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் விரட்டியடித்தது.

ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட இந்திய வீராங்கனைகள் தீபிகா பலிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்று முன்னேறினார்கள். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் சவுரவ் கோஷல், ஹரிந்தர் பால் சந்து ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்கள். மற்றொரு இந்திய வீரர் விக்ரம் மல்கோத்ரா 2-வது சுற்றில் வெற்றி கண்டு கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...