பிற விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: இன்று 3 தங்கம் வென்று 10 தங்கங்களுடன் இந்தியா 3வது இடத்தில் நீடிக்கிறது + "||" + Commonwealth Games: Today, India has 3 golds and India with 10 gold continues to be at 3rd place

காமன்வெல்த் போட்டி: இன்று 3 தங்கம் வென்று 10 தங்கங்களுடன் இந்தியா 3வது இடத்தில் நீடிக்கிறது

காமன்வெல்த் போட்டி: இன்று 3 தங்கம் வென்று 10 தங்கங்களுடன் இந்தியா 3வது இடத்தில் நீடிக்கிறது
காமன்வெல்த் போட்டியில் இன்று 3 தங்கம் வென்று 10 தங்கம் உள்பட 19 பதக்கங்களுடன் இந்தியா 3வது இடத்தில் தொடர்கிறது. #CWG #IndiaWinsGold
கோல்டுகோஸ்ட்,

உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஜமைக்கா, நைஜீரியா, கனடா, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, மலேசியா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.


காமன்வெல்த் போட்டியின் பதக்க பட்டியலில்  ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகள் முறையே முதல் 2 இரண்டு இடங்களில் உள்ளன.  ஆஸ்திரேலியா 38 தங்கம், 31 வெள்ளி மற்றும் 31 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 100 பதக்கங்களை பெற்றுள்ளது.

இதேபோன்று இங்கிலாந்து 22 தங்கம், 23 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 60 பதக்கங்களை வென்றுள்ளது.  இந்தியா 10 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 19 பதக்கங்களை வென்று 3வது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் இந்தியாவின் பிரதீப் சிங் பளு தூக்குதலில் வெள்ளியும், ஜிது ராய் மற்றும் ஓம் மிதர்வால் முறையே தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை துப்பாக்கி சுடுதலிலும் வென்றனர்.  பின்னர் துப்பாக்கி சுடுதலின் மகளிர் பிரிவில் மெகுலி கோஷ் வெள்ளி பதக்கமும், அபூர்வி சண்டேலா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

இந்தியாவின் தங்க பதக்க பட்டியலில், மீராபாய் சானு, சஞ்சிதா சானு, சதீஷ்குமார் சிவலிங்கம், ராகுல் வெங்கட் ராகலா, பூனம் யாதவ், மனு பாகர் மற்றும் ஜிது ராய் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.  டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.

இந்நிலையில்  5வது நாளான இன்று பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி நடைப்பெற்றது. இதில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் - மலேசியாவின் லீ சாங் வேய்-யை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஸ்ரீகாந்த், லீ சாங்கை 21-17, 21-14 என நேர் செட் கணக்கில் வென்று தங்க பதக்கத்தை வென்றார். இதனால் இந்தியாவின் தங்க வேட்டை 10 ஆக உயர்ந்துள்ளது.  

பதக்க பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் நீடிக்கிறது. அதற்கு அடுத்த நிலையில், கனடா, நியூசிலாந்து,  ஸ்காட்லாந்து, வேல்ஸ், தென்னாப்பிரிக்கா, சைப்ரஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளன.