பிற விளையாட்டு

காமன்வெல்த் 2018; குத்துச் சண்டைபோட்டியில் நமன் தன்வர் வெண்கலம் + "||" + CWG 2018: Boxer Naman Tanwar takes 91kg bronze

காமன்வெல்த் 2018; குத்துச் சண்டைபோட்டியில் நமன் தன்வர் வெண்கலம்

காமன்வெல்த் 2018; குத்துச் சண்டைபோட்டியில்  நமன் தன்வர் வெண்கலம்
காமன்வெல்த் போட்டி குத்துச் சண்டை பிரிவில் இந்திய வீரர் நமன் தன்வர் வெண்கல பதக்கம் வென்றார். #NamanTanwar #CWG2018
கோல்டு கோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான இன்றும் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் இந்திய விரர் நமன் தன்வர் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இன்று நடந்த 91 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் நமன் தன்வர் ஆஸ்திரேலியாவின் ஜாசன் வாட்டெலே உடன் மோதினார். இதில் ஆஸ்திரேலியா வீரர் 4-0 என்ற புள்ளிகணக்கில் இந்திய வீரர் தன்வரை வென்றார்.


இதையடுத்து இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாததால் தன்வர் வெண்கல பதக்கம் பெற்றார். இந்த போட்டி தன்வாரின் முதல் முக்கிய நிகழ்வாகும்.

இதன் மூலம் இந்தியா 16 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் உள்பட 35 பதக்கங்களுடன் காமன்வெல்த் பதக்க பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...