பிற விளையாட்டு

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி - மேரி கோம் தங்கம் வென்றார் + "||" + Commonwealth Games 2018 at Gold Coast Day 10 LIVE updates: MC Mary Kom wins gold

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி - மேரி கோம் தங்கம் வென்றார்

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி - மேரி கோம் தங்கம் வென்றார்
காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் தங்கம் வென்றார். #CWG2018 #MaryKom #WinGold
கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் 10-வது நாளான இன்றும் இந்திய அணியினரின் பதக்க அறுவடை தொடர்கிறது.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் இறுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மேரிகோம் வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஒஹாராவை எதிர் கொண்டார். இன்று நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில் மேரிகோம் 4-0 என வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்தியா 18 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் உள்பட 43 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை