பிற விளையாட்டு

அடுத்த காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் - ரனிந்தர்சிங் + "||" + ndia should ignore the next Commonwealth Games - Raninder Singh

அடுத்த காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் - ரனிந்தர்சிங்

அடுத்த காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் - ரனிந்தர்சிங்
அடுத்த காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என ரனிந்தர்சிங் வலியுருத்தல்.
புதுடெல்லி,

சமீபத்தில் கோல்டுகோஸ்டில் முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை அள்ளியது. சாதனை படைத்த துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பின்னர் தேசிய ரைபிள் சங்க தலைவர் ரனிந்தர்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் அடுத்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவு இடம் பெறவில்லை. மீண்டும் துப்பாக்கிசுடுதல் பந்தயத்தை காமன்வெல்த் போட்டியில் சேர்க்க வேண்டும். துப்பாக்கி சுடுதல் போட்டியை மறுபடியும் கொண்டு வராவிட்டால் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்னும் ஓரிரு தினங்களில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் எழுத உள்ளேன்’ என்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை