பிற விளையாட்டு

சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் + "||" + Summer Free Volleyball Training Camp in Chennai

சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம்

சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம்
சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 36-வது இலவச கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். முன்னணி பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள். தினசரி காலை 6.30 மணிக்கு பயிற்சி முகாம் தொடங்கி நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நெல்லை பிரண்ட்ஸ் கிளப்பை தொடர்பு கொள்ளலாம் என்று அதன் செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...