சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் தொடங்கியது


சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் தொடங்கியது
x
தினத்தந்தி 25 April 2018 9:30 PM GMT (Updated: 25 April 2018 8:59 PM GMT)

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 36–வது கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது.

சென்னை, 

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 36–வது கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை தலைமை தாங்கினார். அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஏ.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். வருமான வரி அதிகாரி பி.பாலச்சந்திரன், தமிழ்நாடு உடற்கல்வி தலைமை இன்ஸ்பெக்டர் எஸ்.சந்திரன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க துணைத்தலைவர் உபைதுர் ரகுமான், முகாம் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். மே 25–ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் நூற்றுக்கணக்கான மாணவ–மாணவிகள் பங்கேற்றுள்ளனர். தினசரி காலையில் 6.30 முதல் 8.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல் 6.30 மணி வரையும் பயிற்சி நடைபெறும். பயிற்சியாளர்கள் ஜெகதீசன், தினகரன், கேசவன், பிரசன்னா, செல்வராஜ் மற்றும் முன்னாள் வீரர்கள் மாணவ–மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.


Next Story