பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் போட்டி சிந்து, சாய்னா கால்இறுதிக்கு தகுதி + "||" + Asian Badminton Competition Sindhu, Saina qualifies for quarter-finals

ஆசிய பேட்மிண்டன் போட்டி சிந்து, சாய்னா கால்இறுதிக்கு தகுதி

ஆசிய பேட்மிண்டன் போட்டி சிந்து, சாய்னா கால்இறுதிக்கு தகுதி
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள வுஹான் நகரில் நடந்து வருகிறது.

வுஹான்,

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள வுஹான் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–12, 21–15 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் ஜியோஜினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21–18, 21–8 என்ற நேர்செட்டில் சீனாவின் காவ் பாங்ஜியை தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 40 நிமிடம் நீடித்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஹாங்காங் வீரர் வோங் விங் கி வின்சென்ட்டை சந்தித்தார். இதில் ஸ்ரீகாந்த் 7–2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது வோங் விங் கி வின்சென்ட் காயம் காரணமாக விலகினார். இதனால் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 16–21, 21–14, 21–12 என்ற செட் கணக்கில் சீனதைபே வீரர் வாங் சு வெய்யை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 12–21, 12–21 என்ற நேர்செட்டில் சீன வீரர் சென் லாங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.


ஆசிரியரின் தேர்வுகள்...