பிற விளையாட்டு

தெற்காசிய தடகள போட்டிக்கு 9 தமிழக வீரர்-வீராங்கனைகள் தேர்வு + "||" + South Asian Athletics 9 Tamilnadu players

தெற்காசிய தடகள போட்டிக்கு 9 தமிழக வீரர்-வீராங்கனைகள் தேர்வு

தெற்காசிய தடகள போட்டிக்கு 9 தமிழக வீரர்-வீராங்கனைகள் தேர்வு
தெற்காசிய தடகள போட்டிக்கு 9 தமிழக வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற 5 மற்றும் 6-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நிதின் சிதானந்த் (200 மீட்டர் ஓட்டம்), ராஜேஷ் ரமேஷ் (400 மீட்டர் தொடர் ஓட்டம்), கமல்ராஜ் (டிரிபிள்ஜம்ப்), சந்தோஷ் மணிகண்டன் (உயரம் தாண்டுதல்) ஆகியோரும், பெண்கள் பிரிவில் சுபா (200, 400 மீட்டர் ஓட்டம்), கிரேசினா மேரி (உயரம் தாண்டுதல்), புனிதா (நீளம் தாண்டுதல்), பிரியதர்ஷினி (டிரிபிள்ஜம்ப்), காருண்யா (வட்டு எறிதல்) ஆகியோரும் இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார்கள்.