பிற விளையாட்டு

சர்வதேச, தேசிய போட்டியில் சாதித்தவர்களுக்கு ஊக்கத்தொகை + "||" + Incentive to those who have achieved international and national competition

சர்வதேச, தேசிய போட்டியில் சாதித்தவர்களுக்கு ஊக்கத்தொகை

சர்வதேச, தேசிய போட்டியில் சாதித்தவர்களுக்கு ஊக்கத்தொகை
சர்வதேச, தேசிய போட்டியில் சாதித்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

செயிண்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 19-வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இந்த அகாடமி சார்பில், சர்வதேச, தேசிய போட்டியில் சாதித்த தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு விழாவில் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகையும், விருதும் வழங்கப்பட்டன. சிறந்த வீரர் விருது லட்சுமணனுக்கும், சிறந்த வீராங்கனை விருது எல்.சூர்யாவுக்கும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ. ஐ. தேவாரத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு, செயிண்ட் ஜோசப்ஸ் கல்வி குழும நிர்வாக இயக்குனர் பி.பாபுமனோகரன், தலைமை பயிற்சியாளர் பி.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...