சூதாட்டம் குற்றம் சாட்டப்பட்ட 2 பேட்மிண்டன் வீரர்களுக்கு 15 மற்றும் 20 வருடங்கள் விளையாட தடை


சூதாட்டம் குற்றம் சாட்டப்பட்ட 2 பேட்மிண்டன் வீரர்களுக்கு 15 மற்றும் 20 வருடங்கள் விளையாட தடை
x
தினத்தந்தி 2 May 2018 5:31 AM GMT (Updated: 2 May 2018 5:31 AM GMT)

சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய மலேசிய நாட்டைச் சேர்ந்த 2 பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கு 15 மற்றும் 20 வருடங்கள் விளையாட தடை விதித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. #TanChunSeang #ZulfadliZulkiffli

மலேசியா, 

சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கிய மலேசிய நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் டான் சுன் சிங்கிற்கு 15 வருடங்களும் மற்றும் மற்றொரு வீரரான சல்பட்லி சல்கிஃப்லிக்கு 20 வருடங்களும் விளையாட தடை விதித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

டான் சுங் சிங் மற்றும் முன்னாள் ஜுனியர் பேட்மிண்டன் உலக சாம்பியனான சல்கிஃப்லி ஆகிய இருவரும் பேட்மிண்டன் தொடர்பான நிர்வாக அமைப்பு, பயிற்சிகள், வளர்ச்சி செயல்பாடுகள் போன்ற எந்தவொரு நிகழ்விலும் தொடர்பு கொள்ள கூடாது என பேட்மிண்டன் நிர்வாகம் கூறியுள்ளது.  

இது குறித்து உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த சில குறிப்பிட்டதக்க போட்டிகளில் ஊழல் குற்றங்களில் ஈடுபட்டதால் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டான் சுன் சிங்கை காட்டிலும் சல்கிஃப்லியே அதிக நடத்தை மீறல்களில் ஈடுபட்டுள்ளதும் தற்போது நிரூபனமாகியுள்ளது. மேலும் டான் சுன் சிங்கிற்கு 15000 டாலர்களும், சல்கிஃப்லிக்கு 25000 டாலர்களும் அபராதம் விதித்துள்ளோம்” என கூறியது 

Next Story