பிற விளையாட்டு

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி + "||" + New Zealand Open Badminton: Indian players qualify for quarter-finals

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி
நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து,

நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்தில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-11, 21-19 என்ற நேர்செட்டில் மிஷா ஜில்பெர்மானை (இஸ்ரேல்) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-8, 21-10 என்ற நேர்செட்டில் இந்தோனேஷிய வீரர் சோனி குன்கோரோவை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-23, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் சீனதைபே வீரர் ஹூ ஜென் ஹாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய வீரர் சவுரப் வர்மா தோல்வி கண்டு வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆடவர் தரவரிசை பட்டியல்; டாப் 20ல் 3 இந்திய வீரர்கள்
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆடவர் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் தனது இடத்தினை கிதம்பி ஸ்ரீகாந்த் தக்கவைத்து உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை