பிற விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சாய் பிரனீத் கால்இறுதிக்கு தகுதி + "||" + India player Sai Praneeth Eligible for quarter finals

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சாய் பிரனீத் கால்இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் சாய் பிரனீத் கால்இறுதிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

சிட்னி, 

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21–12, 21–14 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியா வீரர் பான்ஜி அகமது ஜக்காவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21–16, 21–12 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் தகுமா உடாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனு அட்ரி–சுமீத் ரெட்டி ஜோடி 21–17, 21–17 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் ஹையுக் கோன் சோய்–பார்க் கையுங் ஹூன் இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது.


ஆசிரியரின் தேர்வுகள்...