பிற விளையாட்டு

சர்வதேச துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ஹீனா சித்துவுக்கு தங்கம் + "||" + International shooters: Indian player Heena Sidhu is gold

சர்வதேச துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ஹீனா சித்துவுக்கு தங்கம்

சர்வதேச துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ஹீனா சித்துவுக்கு தங்கம்
சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றார்.
ஹனோவெர்,

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் ஹனோவெர் நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து 239.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். பிரான்ஸ் வீராங்கனை நாதில்டே லாமோல்லியும் சம புள்ளிகள் குவித்தார். இருவருக்கும் இடையிலான ‘டையிங் ஷூட்-அவுட்டில்’ ஹீனா சித்து வெற்றி கண்டு இந்த தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தோல்வி அடைந்த நாதில்டே வெள்ளிப்பதக்கமும், மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரீ நிவேதா 219.2 புள்ளியுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். ஹீனா சித்து சமீபத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.