பிற விளையாட்டு

உபேர் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா வெளியேறியது + "||" + India out of Uber Cup after losing 0-5 to Japan

உபேர் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா வெளியேறியது

உபேர் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா வெளியேறியது
உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் ஜப்பானிடம் தோல்வி அடைந்து இந்தியா அணி வெளியேறியது. #UberCup
பாங்காக்,

தாய்லாந்தில் பாங்காக் நகரில் நடைபெறும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி ஜப்பானிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியின் "ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா, முதல் ஆட்டத்தில் கனடாவிடம் 1-4 என வீழ்ந்து, 2-வது ஆட்டத்தில் 5-0 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.


இந்நிலையில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால் 19-21, 21-9, 20-22 என்ற செட்களில் உலகின் 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுசியிடம் வீழ்ந்தார். மற்றொரு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சன்யோகிதா கோர்படே-பிரஜக்தா சாவந்த் ஜோடி 15-21, 6-21 என்ற செட்களில், உலகின் 4-ம் நிலை ஜோடியான அயாகா டகாஹாஷி-மிசாகி மட்சுடோமோ ஜோடியிடம் வீழ்ந்தது. உலக சாம்பியனான நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட இந்திய இளம் வீராங்கனை வைஷ்ணவி ரெட்டி ஜக்கா, 10-21, 03-21 என்ற செட்களில் போராடி வீழ்ந்தார். இரட்டையர் பிரிவு 2-வது ஆட்டத்தில் வைஷ்ணவி பாலே-மேகானா ஜக்கம்புடி ஜோடி 8-21, 17-21 என வீழ்ந்தது. இறுதியில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் அருணா பிரபுதேசாய் 12-21, 17-21 என்ற செட்களில் தோல்வி அடைந்தார்.