பிற விளையாட்டு

மாநில நீச்சல் போட்டி சென்னையில் நடக்கிறது + "||" + The state swimming competition is going on in Chennai

மாநில நீச்சல் போட்டி சென்னையில் நடக்கிறது

மாநில நீச்சல் போட்டி சென்னையில் நடக்கிறது
மாநில நீச்சல் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னை,

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. 4 வயது பிரிவுகளில் நீச்சல் போட்டிகளும், 3 வயது பிரிவுகளில் டைவிங் போட்டிகளும் நடத்தப்படுகிறது. இதில் 650 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை தமிழக போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார்.


பரிசளிப்பு விழாவில் சர்வதேச முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

இந்த போட்டியில் இருந்து ஜூன் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெறும் தேசிய சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.

இந்த தகவலை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.