பிற விளையாட்டு

உலக கிக் பாக்சிங் போட்டி சென்னை மாணவர்கள் பதக்கம் வென்றனர் + "||" + World Kick Boxing Tournament Chennai students won the medal

உலக கிக் பாக்சிங் போட்டி சென்னை மாணவர்கள் பதக்கம் வென்றனர்

உலக கிக் பாக்சிங் போட்டி சென்னை மாணவர்கள் பதக்கம் வென்றனர்
உலக கிக் பாக்சிங் போட்டி ரஷியாவில் உள்ள அனபா நகரில் நடந்தது. இதில் 55 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை,

உலக கிக் பாக்சிங் போட்டி ரஷியாவில் உள்ள அனபா நகரில் நடந்தது. இதில் 55 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 80 கிலோவுக்கு உட்பட்ட உடல் எடைப்பிரிவில் சென்னை லேடி ஆண்டாள் பள்ளி மாணவர் வசீகரன் தங்கப்பதக்கம் வென்றார். இதே போட்டியில் 55 கிலோ உடல் எடைப்பிரிவில் சென்னை பப்ளிக் பள்ளி மாணவர் அருண் தனிஷ்க் வெண்கலப்பதக்கம் பெற்றார். இருவரும் சென்னை அண்ணாநகரில் உள்ள ஸ்பிட் பயர் கிக் பாக்சிங் அகாடமியில் பயிற்சியாளர் சுரேஷ் பாபுவிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். பதக்கம் வென்ற சென்னை மாணவர்கள் இருவரும் நேற்று சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.