பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார்.

ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் வலது தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆகஸ்டு 1–ந்தேதி முதல் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு, ஆண்டர்சனுக்கு ஒன்றரை மாதம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து வரும் கவுண்டி போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். ‘சவாலான இந்திய தொடருக்கு ஆண்டர்சன் முழு உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்’ என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் குறிப்பிட்டார்.

வர்ணனையாளர் ஆகிறார், வார்னர்

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இனி ஆஸ்திரேலியஅணியில் இடம் பெறுவது சந்தேகமே என்று அவர் ஏற்கனவே புலம்பினார். இந்த நிலையில் வார்னர் புதிய அவதாரமாக வர்ணனையாளர் பணியை கவனிக்க இருக்கிறார். இங்கிலாந்துக்கு சென்றுள்ள டிம்பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி லண்டனில் நாளை மறுதினம் நடக்கிறது. இந்த தொடரில் 2–வது ஆட்டத்தில் இருந்து ‘நைன்’ சேனலுக்காக வார்னர் வர்ணனையாளர் ஆக செயல்பட இருக்கிறார். இந்த தொடர் நிறைவடைந்ததும் அவர் கனடாவில் குளோபல் 20 ஓவர் லீக் போட்டியில் விளையாட உள்ளார்.