பிற விளையாட்டு

கபடி மாஸ்டர்ஸ் 2018: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா + "||" + Kabaddi Masters 2018: India defeat Pakistan

கபடி மாஸ்டர்ஸ் 2018: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

கபடி மாஸ்டர்ஸ் 2018: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
கபடி மாஸ்டர்ஸ் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான துவக்க ஆட்டத்தில் 36-20 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியஅணி வெற்றிபெற்றது. #KabaddiMastersDubai2018
துபாய்,

துபாயில் கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ்ஷிப் தொடர் நேற்று துவங்கி வரும் ஜூன் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் நேற்று நடந்த துவக்க ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணியின் அஜய் தாகூரின் சிறப்பான தலைமையின் மூலம் இந்திய அணி 22-9 என முன்னிலை வகித்தது. இதில் இந்திய வீரர்கள் அனைவருமே சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் திணறினர். இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 14 புள்ளிகளும், பாகிஸ்தான் 11 புள்ளிகளும் எடுத்தது. இறுதியில் இந்தியா 36-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் கென்யாவை இன்று எதிர்கொள்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
2. காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது: ராணுவம்
காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதம் நோக்கி இழுக்க பாகிஸ்தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறது என்று இந்திய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
3. சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்
சீனாவுக்கு கழுதைகளை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்ய உள்ளது.
4. இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடமாட்டோம் பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி
இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடமாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி கூறியுள்ளார்.
5. பிரிவினைவாத தலைவருடன் பாக். மந்திரி பேச்சு: இந்தியா கண்டனம்
பிரிவினைவாத தலைவருடன் பாகிஸ்தான் மந்திரி பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது.