பிற விளையாட்டு

கபடி மாஸ்டர்ஸ் 2018: கென்யாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி + "||" + Kabaddi Masters 2018: India wins the match against Kenya

கபடி மாஸ்டர்ஸ் 2018: கென்யாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

கபடி மாஸ்டர்ஸ் 2018: கென்யாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
கபடி மாஸ்டர்ஸ் தொடரில் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் 48-19 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியஅணி வெற்றிபெற்றது. #KabaddiMastersDubai2018
துபாய்,

துபாயில் கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.

முன்னதாக நடைபெற்ற துவக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா 36-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் கென்யா அணிகள் மோதின. இதில் இந்திய அணியினர் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 27-9 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இந்திய அணியினரின் ஆதிக்கம் தொடர்ந்தது. இறுதியில் இந்திய அணி 48-19 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற மற்றோரு லீக் ஆட்டத்தில் ஈரான் அணி 54-24 என்ற புள்ளிக்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. இந்திய அணி, 25-ந் தேதி நடைபெற உள்ள தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
2. தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
3. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
4. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு
இந்தியா மிக முக்கிய நட்பு நாடு எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாரக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
5. சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை
சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை வழங்கி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...