பிற விளையாட்டு

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் பிரனாய், சாய்னா வெற்றி + "||" + Indonesia Open Badminton Prayai, Saina wins

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் பிரனாய், சாய்னா வெற்றி

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் பிரனாய், சாய்னா வெற்றி
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் பிரனாய், சாய்னா வெற்றி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஜகர்தா,

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய், 2 முறை ஒலிம்பிக் சாம்பியனும், 5 முறை உலக சாம்பியனுமான லின் டானை (சீனா) எதிர்கொண்டார். 

59 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிரனாய் 21–15, 9–21, 21–14 என்ற செட் கணக்கில் லின் டானை வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21–9, 12–21, 22–20 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் ராஸ்முஸ் ஜெம்கியை சாய்த்து 2–வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 10–21, 13–21 என்ற நேர்செட்டில் வாங் சு வெய்யிடம் (சீன தைபே) தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய்னா நேவால் 21–12, 21–12 என்ற நேர்செட்டில் டினார் அயூஸ்டினை (இந்தோனேஷியா) தோற்கடித்து 2–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.