பிற விளையாட்டு

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் சிந்து வெற்றி + "||" + Indonesia Open Badminton Sindhu wins in the first round

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் சிந்து வெற்றி

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் முதல் சுற்றில் சிந்து வெற்றி
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.

ஜகர்தா,

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள போன்பவி சோசுவோங்கை (தாய்லாந்து) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 14-21, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரர் கென்டோ மெமோதாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை